(1) புருஷார்த்தம் (குறிக்கோள்)
மனிதர்களால் குறிக்கோளாகத் தேடப்படுபவை. புருஷ: - மனிதன்.
பொதுவாக நான்கு வகை குறிக்கோள்கள் பேசப்படுகின்றன:
தர்மார்த்த காம மோக்ஷம்
(i) தர்ம: - அறம் (புண்ணியம்)
(ii) அர்த்த: - பொருள் (வாழ்வாதாரம் அல்லது பாதுகாப்பு)
(iii) காம: - இன்பம் (ஆடம்பரம்)
(iv) மோக்ஷம்(ஸ்ரேயஸ்): - வீடு (சம்சாரத்திலிருந்து விடுபடுதல்)
* சம்சார: - மானச தாபம், மன நிறைவின்மை (நம்முடைய மனதில் ஏற்படும் சோகம், ....)(2) சாஸ்திரம்
புருஷார்த்தத்தை அடைய துணைபுரிவது (உபாயம், மார்க்கம்)
(ii) ஸ்ம்ருதி – வேதத்தின் கருத்துக்களை ரிஷிகள் விளக்குதல்
(iii) இதிகாசம் – என்றால் "இவ்விதம் நடந்தது" எனப் பொருள் (மகாபாரதம், ராமாயணம்)
(iv) புராணம்
(3) வர்ணாஷ்ரம தர்மம்
(i) வர்ணம் (வகைகள்) - பிராமணன், ஷத்ரியன், வைஷியன், சூத்திரன்
(ii) ஆஷ்ரமம் (வாழ்க்கை நிலைகள்) – பிரம்மசரியம், கிரஹஸ்தம், வானப்பிரஸ்த்தம், சந்யாசம்
ஆஷ்ரமம் :
(i) பிரம்மசரியம் (மாணவப் பருவம்) – வேதம் கற்றல்
(ii) கிரஹஸ்தம் (இல்லறம்)- 5 வகை யக்ஞகள்
Ø தேவ யக்ஞம் – இறை வழிபாடு
Ø ரிஷி யக்ஞம் – ஸ்ம்ருதி பாதுகாத்தல்
Ø பித்ரு யக்ஞம் – முன்னோர் கடமை
Ø மனுஷ்ய யக்ஞம் – மற்ற மூன்று ஆஸ்ரமத்திலுள்ளவர்களை பாதுகாத்தல்
Ø பூத யக்ஞம் – மற்ற உயிரினங்கள் பாதுகாத்தல்
கிரஹஸ்த கடமை – யக்ஞம், தானம், ஆரம்ப நிலையில் தவம் அல்லது தியானம்
(iii) வானப்பிரஸ்த்தம் (பணி ஓய்வுக்குப் பிந்தய பருவம்) - கடமைகளை துறத்தல், தபஸ்
(iv) சந்யாசம் (துறவறம்) – சாஸ்திர ஸ்ரவண, மனன, நிதித்யாசனம்; படித்து, சிந்தித்து, ஞான நிஷ்டை அடைதல்
(4) கர்ம யோகம்
கர்ம – வேதத்தில் சொல்லப்படும் செயல்
யோகம் – சாதனம்; பகவத் கீதையில் யோகம் என்பதற்கு தலைப்பு என்று பொருள்.
மனத்தூய்மைக்காக (சித்த சுத்தி) கையாளும் சாதனம். கிரஹஸ்த காலத்தில் கர்ம யோகத்தை கையாளுதல் சித்த சுத்திக்கு வழிவகுக்கும்.
(i) வேத கர்மங்களுக்கான 3 கதிகள் :
Ø புண்ணியம் – கடமைகளை விருப்பமுடன் செய்தல்
Ø பாவம் – கடமைகளை செய்யாவிடில் வருவது
Ø மோக்ஷம் – கடமைகளைக் கர்மமாக (ஆசையில்லாமல்) செய்தல்
(ii) கர்மயோகம் என்றால் என்ன?
செயல்களைக் குறித்து ஒருவனுக்கு இருக்கவேண்டிய பாவனை கர்மயோகம் எனப்படும்.
Ø ராக-த்வேஷ ரஹித புத்தி – விருப்பு வெறுப்பற்று கடமைகளைச் செய்தல்
Ø நிஷ்காம கர்மம் – கர்மத்தின் பலனை எதிர்பாராமலிருப்பது
Ø ஈஸ்வரார்பண புத்தி – கர்மத்தை ஈஸ்வரனுக்கு அர்பணிக்கும் புத்தி
(iii) கர்ம யோகர்களுக்கு கர்மத்தை நோக்கி இருக்கவேண்டிய 4 விதமான பாவனைகள்:
Ø தர்மம் (சாமான்ய தர்மம் & விஷேச தர்மம்) – கடமைகளை மேலே கூறிய பாவனைகளுடன் செய்தல்
Ø காம்ய கர்மம் (இன்பத்திற்காக, ஆசைப்பட்டு பலனை விரும்பி செய்பவை, பொழுதுபோக்கு போன்றவைகள்) - கர்ம யோகத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இவை இருப்பதில் தவறில்லை; ஆனால் அதை பிரசாத புத்தியுடன் செய்ய வேண்டும்.
Ø நிஷித்த கர்மம் – தடை செய்யப்பட்ட கர்மங்கள் (மது அருந்துதல், திருடுதல் ...)
Ø பிராயசித்த கர்மம் (எதிர்கால பயத்துடன் செய்யும் பரிகார பூஜைகள்) – இதுவும் தியாகம் செய்யப்பட வேண்டும்.
(5) உபாசனை (உபாசனம் (அ) உபாசனா)
மனதை ஒருமுகப்படுத்துவது, குவிப்பது. உப + ஆசனம் = சமீபத்தில் + இருத்தல்
சகுண ப்ரம்ம தியான ரூப மானஸ வியாபார: |
மனதினால் செய்யப்படும் செயல்; எடுத்துக் கொண்ட காரியத்தில் தியானம் மூலமாக மனதை வைத்துப் பழக்குதல். கர்த்தாவாக(தலைவனாக) உள்ள மனதை கரணமாக(தொண்டனாக) மாற்றுவது. பொதுவாக வானப்பிரஸ்த்த காலத்தில் மேற்கொள்ளப்படும் சாதனை இது. இருப்பினும் கிரஹஸ்த காலத்திலேயே தொடங்கப்பட்ட உபாசனை வானப்பிரஸ்த்த காலத்தில் துணை நிற்கும். |
(i) உபாசனைக்கான ஏற்பாடுகள்:
§ அன்னமய கோஷம் (உடல்) – அளவான செயல் மூலம் உடலை ஆரோக்கியமாக வைப்பது
§ அளவான உணவு (அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் உண்பது)
§ இந்திரியக் கட்டுப்பாடு – தேவையான விஷயங்கள் மட்டும் கண், காது போன்ற புலன்களுக்குக் கொடுத்தல்; (வானப்பிரஸ்த்தம் – மௌனம்)
§ அதிக சுக துக்கம் இல்லாமல் சம பாவனையுடன் இருப்பது
§ பொறுப்புகளை குறைத்துக் கொள்ளுதல் வேண்டும்
(ii) உபாசனைக்கான படிநிலைகள்:
§ முதலில் அதை ஒரு பழக்கமாக மாற்றுதல் வேண்டும் - உடல், இந்திரியங்களை அமைதிப்படுத்தி அமர்ந்து பழகுதல்
§ எண்ணங்களை கவனித்து மனதை ஒருமுகப்படுத்தும் முயற்சி
* மானஸ பாராயணம்
* மானஸ ஜபம்
§ உபநிஷத்துக்களில் சொல்லப்படும் உபாசனைகள்
மனதை விரிவுப்படுத்தும் முயற்சி
(6) ஞான யோகம்
(i) சாத்ய வஸ்து – நம் வாழ்க்கையில் அடையாததை, இல்லாததை அடைதல் (பொருள், வீடு, ஓய்வு…)
(ii) சித்த வஸ்து – ஏற்கனவே இருப்பதை அடைவது. அறியாமையில் இழக்கப்பட்ட்தை ஞானத்தின் மூலம் அடைதல்
மோக்ஷம் = எல்லையற்றது, பூர்ணமானது, நிறைவானது(தன்னிறைவு, மனநிறைவு).
=> திரிபுடி [மூன்று விதமான வேறுபாடுகள்]:
Ø ப்ரமாதா (Subject) – ஞானத்தை அடைய விரும்புவன் ; அறிபவன்
Ø ப்ரமேயம் (object) – அடைய விரும்பும் பொருள்
Ø ப்ரமாணம் (instrument) – கருவி [ப்ரமாணத்தில் தேர்ந்தெடுக்கும் உரிமையில்லை; எ.கா., வடிவம்-கண், வாசனை-மூக்கு]
STAGES
(i) ஸ்ரவணம் – வேதாந்தம் மற்றும் சாஸ்திரம் புரியும் வரை கேட்டல்
சாஸ்திர தாத்பர்யம்(மையக்கருத்து):
[1] ஈஸ்வர-ஜகத்-ஜீவன்,
* நம்மை பற்றிய அறிவு(ஜீவன்)
* உலகத்தை பற்றிய அறிவு(ஜகத்)
* ஈஸ்வரனைப் பற்றிய அறிவு
[2] ஜீவ ப்ரம்ம ஐக்கிய ஞானம்,
ஜீவாத்மாவும் ஈஸ்வரனும் அடிப்படையில் ஒன்று எனும் அறிவு
[3] ஜகத் மித்யா,
உலகம் வெறும் தோற்றம் (நிலையற்றது) எனும் அறிவு
(ii) மனனம் –
சாஸ்திரத்தின் மையக்கருத்து(சப்த ப்ரமாணம்) மற்றும் நமது அனுபவம்(ப்ரத்யக்ஷ ப்ரமாணம்) ஆகிய இரண்டு ப்ரமாணத்திற்கும் இடையேயுள்ள முரண்பாட்டை விசாரம் செய்து சந்தேகம் தெளிதல்.
(iii) நிதித்யாசனம் – தியானப் பயிற்சியின் மூலம் ஞானத்தில் இருந்து பழகுதல்.
(7) பக்தி
இறைவனை நாடுதல், நேசித்தல், பூஜித்தல்
Ø சாதகன் – பக்தன்
Ø சாத்யம் – அடையப்படும் பொருள்
Ø சாதனம் – கருவி
=> மூன்று வகை பக்தி பேசப்படும்:
(i) ஷகாம பக்தி (காம்ய பக்தி)
Ø சுகப் பிராப்த்தி - சுகத்தை சாத்தியமாகக் கொள்தல்
Ø துக்க நிவர்த்தி, துக்கதிலிருந்து விடுதலையடைதலை சாத்தியமாகக் கொள்தல்
இவற்றிற்காக செலுத்தப்படும் பக்தி
(ii) நிஷ்காம பக்தி (அல்லது கர்ம யோகம்)
சாதனமும் பகவான், சாத்தியமும் பகவான். மோட்ஷத்திற்க்குத் தேவையான மனத்தூய்மைகாக செலுத்தப்படும் பக்தி. இது கர்ம யோகம் எனப்படும்.
(iii) பரா பக்தி( ஞான லக்ஷண பக்தி)
சாதனமும் இல்லை, சாத்தியமும் இல்லை; ஈஸ்வரனும் நானும் வேறல்ல என்கிற பாவனை. ஞானியின் நிலை.
(8) சாதன சதுஷ்டய சம்பத்தி
சாதன – தகுதிகள்
சதுஷ்டய – 4
சம்பத்தி – அடைய வேண்டும்
சம்பன்ன: - அதிகாரி – 4 தகுதியுடையவன்
ஞான யோக சாதனைக்கு முன் அடைய வேண்டிய தகுதிகள்
[1] விவேகம்
நித்ய-அநித்ய வஸ்து விவேக:
நிலையானது, நிலையற்றது என பிரிக்கும் அறிவு. நம்முடைய அனுபவம் மற்றும் பிறரது அனுபவம் வாயிலாக நிலையானது(ப்ரம்மம்) எது, நிலையற்றது(உலகம்) எது என அறிவது. உபாயம் – கர்ம யோகம்
[2] வைராக்யம்
போகத்தில் அதாவது இந்திரிய சுகம் மற்றும் உலகப் பொருட்களில் விருப்பமில்லாத மனநிலை. ஆரம்ப கட்டத்தில் வரும் வெறுப்பினால் தவறில்லை, ஆனால் அது பின்னர் விருப்பற்ற நிலையாக மாற வேண்டும். உபாயம் – அணுதர்சனம்; மீண்டும் மீண்டும் விவேகத்தை விசாரம் செய்தால் வைராக்யம் பிறக்கும்.
[3] சமாதி ஷட்க சம்பத்தி:
இதில் 6 பண்புகள் உள்ளன.
(i) சமம் – மனக்கட்டுப்பாடு (அ) மனஅமைதி
Ø விருப்பு, வெறுப்பு, காமம், கோபம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல்
Ø ஏற்கனவே சேமிக்கப்பட்ட பதிவுகளிலிருந்து விலகி இருத்தல்
(ii) தமம் – இந்திரியக் கட்டுப்பாடு
சஞ்சலப்படும் விஷயத்தில் இந்திரியங்களை செலுத்தாமல் இருத்தல்; ஞானேந்திரியங்கள் மற்றும் கர்மேந்திரியங்களுக்கு நல்ல உணவு கொடுப்பதன் மூலம் மனதுக்கு நல்ல உணவு கொடுக்க வேண்டும்.
(iii) உபரமம் – நிலைத்து இருந்து பழகுதல்
சமத்தையும், தமத்தையும் தொடர்ந்து செய்யும் முயற்சி.
(iv) திதிக்ஷா (சகித்தல்) – பொறுமை (endurance)
சுக - துக்கம் முதலான இருமைகளை சகித்துக் கொள்ளுதல்; சக்தியுள்ள மனம்
(v) ஸ்ரத்தா: - நம்பிக்கை (belief)
குருவினிடத்தும், சாஸ்த்திரத்தினடத்தும்(ஈஸ்வரத்துவம்) நம்பிக்கை
(vi) சமாதானம் – இலட்சியத்தில் மனதை வைத்தல்
ஞான யோகம் என்ற சாதனத்தில் மனதை வைத்துப் பழகுதல்
[4] முமுக்ஷுத்வம்
மோக்ஷம் அடைய இச்சை; உபாயம் – ஞான யோகம்
(9) ஸ்ரவணம் (சாஸ்திரம் கேட்டல்):
உபநிஷத்தில் பேசப்படும் கருத்துக்களை நான்காகப் பிரிக்கலாம்:
[1] ஜீவ விசாரம் [2] ஈஸ்வர விசாரம் [3] ஜீவ – ஈஸ்வர சம்பந்தம் [4] பல விசாரம்
[1] ஜீவ விசார:
ஜீவன் – உயிர் வாழ்பவன் (நான்)
(i) அனாத்மா
1. ஸ்தூல சரீரம் (உடல்):
பஞ்ச பூதங்களினால் (ஆகாசம், வாயு, அக்னி, நீர், ப்ருத்வி) செய்யப்பட்டது. உடல் ஆரோக்கியம், நிறம், பாலினம் முதலிய வேறுபாட்டிற்கு காரணம் அவரவர்களின் கர்ம பலன்.
ஸ்தூல உடல் அடையும் 6 வித மாறுபாடுகள்:
Ø அஸ்தி - காரணமாக கர்பத்தில் இருத்தல் (தாயினுடைய வயிற்றில்)
Ø ஜாயதே - பிறத்தல்
Ø வர்ததே - வளர்தல்
Ø விபரிணமதே - மாற்றத்தை அடைதல் (வளர்ச்சி நின்ற பிறகு)
Ø அபக்ஷீயதே - தேய்தல்
Ø வினஷ்யதி - மடிதல்
போகத்தை அனுபவிக்கும் வீடு ஸ்தூல சரீரம் (போக ஆயதனம்).
2. சூக்ஷம சரீரம் (மனம்):
படைப்பு = காரணம் + சூக்ஷமம் + ஸ்தூலம்
போகத்தை அனுபவிக்கும் கருவி சூக்ஷம சரீரம்(போக சாதனம்).
19 அவையவங்கள் சேர்ந்தது சூக்ஷம சரீரம். அவை
3. காரண சரீரம் (நிர்விகல்ப சொரூபம்):
எது ஸ்தூலத்திற்கும், சூக்ஷமத்திற்கும் காரணமோ(எதிலிருந்து ஸ்தூல சூக்ஷமம் வந்ததோ) அதுவே காரண சரீரம். மரத்திற்கு விதை எப்படி காரணமோ அதுபோல. விதையில் கிளை, இலை, கொடி என்ற வேறுபாடு கிடையாது.
* நிர்விகல்பம் – விகல்பம் அற்றது – வேறுபாடு அற்றது
* எப்போது தோன்றியது எனில் அநாதி, அதாவது அதன் தோற்ற காலத்தை கூற முடியாது.
=> பஞ்ச கோஷம்:
இந்த மூன்று சரீரம் 5 ஆகப் பிரிக்கப்படுகிறது. அது பஞ்ச கோஷம் எனப்படும். கோஷ: - உறை (அனாத்மா ஆத்மாவை உறை போல மறைப்பதால்)
(i) அன்னமய கோஷம் - ஸ்தூல சரீரம்
(ii) பிராணமய கோஷம் – 5 பிராணன் + 5 கர்மேந்திரியங்கள்
(iii) மனோமய கோஷம் – மனம் + 5 ஞானேந்திரியங்கள்
(iv) விக்ஞானமய கோஷம் – புத்தி + 5 ஞானேந்திரியங்கள்
(v) ஆனந்தமய கோஷம் – காரண சரீரம்
அவஸ்தா த்ரயம் (ஜீவனுக்குள்ள மூன்று வித அனுபவங்கள்):
(i) ஜாக்ரத் – விழிப்பு நிலை [ஸ்தூல உடல் வரை அபிமானம் இருக்கும்போது]
(ii) ஸ்வப்ந – கனவு நிலை [சூக்சம சரீரம் வரை அபிமானம்]
(iii) சுசுப்தி – ஆழ்ந்த உறக்கம் (காரண சரீர அபிமானம்; அறியாமை + ஆனந்தம்)
(ii) ஆத்ம விசாரம்
ஞான(அறிவு) சொரூபம்
ஆத்மாவின் லக்ஷணங்கள்:
(i) த்ருக் - அறிபவன்
(ii) சித் – அறிவு மயம்
(iii) நிர்விகாரம் - மாற்றமற்றது
(iv) ஏகம் - ஒன்று
(v) ஸத்யம் - உண்மை
அனாத்மாவின் லக்ஷணங்கள்:
(i) த்ருஷ்யம் - அறியப்படுவது
(ii) ஜடம் – அறிவற்றது
(iii) ஸவிகாரம் - மாறுவது
(iv) அனேகம் - பலவானது
(v) மித்யா – வெறும் தோற்றம்
* ஆத்மா மற்றும் அனாத்மாவிற்கிடையேயான சம்பந்தம் என்ன?
ஸ்படிகம் – மலர்; ஸ்படிகத்தில் எதிரொலிக்கும் மலரின் நிறத்தை போன்று அனாத்மா ஆத்மாவின் மீது ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.
கயிறு - பாம்பு; மங்கிய வெளிச்சத்தில் கயிற்றில் தெரியும் பொய்யான பாம்பை போல அறியாமையினால் அதிஷ்டானமான ஆத்மாவின் மீது மித்யாவான அனாத்மா தெரிந்து கொண்டுள்ளது.
=> ஜட சொரூபமான மாயையின் லக்ஷணங்கள்:
(i) த்ரி குண ஆத்மிகா (சத்வம், ரஜஸ், தமஸ்)
(ii) காரண பிரபஞ்சம் (ஸ்தூல, சூக்ஷம, காரணம்)
(iii) அநாதி ( தோற்றம் கிடையாது)
(iv) ப்ரம்மாஸ்ரயம் (ப்ரம்மத்தை சார்ந்து உள்ளது, தனித்து செயல்படாது)
மாயையும், ப்ரம்மமும் சேரும் தத்துவம் => ஜகத் காரணமானவர்
ஈஷ்வரன் 2 வகையான காரணமாகவும் இருந்து இந்த உலகை படைத்துள்ளார்.
=> சிருஷ்டி:
ஈஷ்வர மாயா அம்சத்திலிருந்து சிருஷ்டி தோன்றுகிறது.
=> பஞ்ச சூக்சம பூத சிருஷ்டி:
மூன்று குணத்தை (சத்வ, ரஜஸ், தமஸ்) உடைய 5 சூக்சம பூதங்கள் தோன்றியது.
=> மூன்று குணங்களின் தன்மைகள்:
(i) சத்வம் => அறிவு, ஞானம்
(ii) ரஜோ => செயல்படும் சக்தி
(iii) தமோ => ஜட தன்மை
=> பிரபஞ்ச தோற்றம்:
ஐந்து சூக்சம பூதங்களின்,
* சத்வ குணத்திலிருந்து => ஜீவர்களின் அந்தக்கரணம் + 5 ஞானேந்திரியங்கள் வந்தன.
* ரஜோ குணத்திலிருந்து => கர்மேந்திரியங்கள் + ப்ராணன் படைக்கப்பட்டது.
* தமோ குணத்திலிருந்து => ஸ்தூல சரீரம் வந்தது.
(*) பஞ்சீகரணம் => 5 சூக்சம தமோ குணத்தின் கலவை ஸ்தூல பிரபஞ்சம். தத்துவபோதம் என்கிற நூலில் சிருஷ்டி தோன்றிய விதம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
=> ப்ரம்ம சொரூப லக்ஷணங்கள்:
(i) ஞான சொரூபம்
(ii) நிர்விகாரம்
(iii) சத்யம் (எப்போதும் இருப்பது)
* அனாத்மாவின் நோக்கில், ஈஸ்வரன் (மாயா) படைத்தவன், நாம்(ஸ்தூல, சூக்சம படைக்கப்பட்டவர்கள்.
* ஆத்மாவின் நோக்கில், ஈஸ்வரனும் நானும் ஐக்கியம்.
[3] ஜீவ – ஈஸ்வர சம்பந்த:
* ஐக்கிய (ஒன்று) சம்பந்தம்
* ப்ரமானம் => அறிவைக் கொடுக்கும் கருவி
* சாஸ்திரம் சப்த ப்ரமாணம் (சொற்களினால் பெறப்படும் ஞானம்)
=> மகா வாக்கியம் (முக்கிய வாக்கியம்)
ஜீவனையும் ஈஷ்வரனையும் சம்பந்தப்படுத்தி ஐக்கியப்படுத்துகிறது. உபநிஷத்துக்களில் மகா வாக்கியங்கள் உள்ளன.
மகா வாக்கிய லக்ஷணங்கள் :
Ø ஜீவ ஈஸ்வர ஐக்கிய போதக வாக்கியம்
Ø அகண்டார்ந்த போதக வாக்கியம்
* சமன்படுத்துவதால் மகா வாக்கியத்தை சமன்பாடு எனவும் அழைக்கலாம்.
சமன்பாடு :
எங்கு மேலோட்டமான(தோற்றத்தில்) வேறுபாடு இருந்து உண்மையில் வேறுபாடு இல்லையோ அங்கு சமன்பாடு தேவைப்படுகிறது. E.g: 13 – 5 = 4 + 4.
(சிறு வயதில் நாம் பார்த்த அண்டை வீட்டாரின் குழந்தையை பல வருடம் கழித்து பார்க்கும் போது)
* சரீர ஆதாரம் ஆத்மா, ப்ரபஞ்ச ஆதாரம் ப்ரம்மம்.
* மாயையில் பார்க்கும் போது,
§ ஜீவன் கர்மத்தை செய்பவன் (கர்த்தா, போக்தா)
§ ஈஷ்வரன் கர்ம பலத்தை கொடுப்பவர் (அகர்த்தா, அபோக்தா).
* வாச்சியார்தத்தில்(அனாத்மா) ஐக்கியமல்ல, லக்ஷியார்த்தத்தில்(சத், சித்) ஐக்கியம்.
[4] பல விசார:
பிரயோஜனம் – மோக்ஷம்
=> உபநிஷத்துக்களில் சொல்லப்படும் முக்கிய கருத்துக்கள்: மகா வாக்கியம், தகுதிகள், பிரயோஜனம்
ஜீவன் முக்தி
உயிரோடு இருக்கும் போதே விடுதலை அடைதல் (பயம், ஆசை, காம, குரோத எண்ணங்களில் இருந்து விடுபடுதல்)
விதேக முக்தி
ஞானி தன் தேகம் சென்ற பிறகு மீண்டும் பிறப்பெடுக்காத தன்மை விதேக முக்தி. விதேக முக்தி என்றாலே எல்லா கர்மத்திலிருந்தும் முக்தி எனப்படுகிறது. ஜீவன் முக்தியை தொடர்ந்து வருவது விதேக முக்தி.
* அக்ஞானி – மீண்டும் ஸ்தூல சரீரம் எடுத்து சம்சாரத்தை தொடர்கிறான்.
=> மூன்று விதமான கர்மங்கள் [Three types of karma]:
(1) சஞ்சித கர்மம் (2) ப்ராரப்த கர்மம் (3) ஆகாமி கர்மம்
* எல்லா வித கர்மத்திற்கும் பலன் உண்டு.
* பலன் 2 வகைப்படும்
<*> பாவ புண்ணியம் எப்போது வேண்டுமானாலும் வெளிப்படலாம். உடனடியாக வெளிப்பட வேண்டுமென்ற அவசியம் கிடையாது.
<*> பாவ புண்ணியம் அனுபவிக்கும் பொருட்டு உடலும், உலகமும் (அதற்கான சூழ்நிலையும்) கொடுக்கப்படுகிறது. பொருள் (உலகம்) இல்லாமல் உடலுடன் மட்டும் சுக துக்கம் அனுபவிக்க இயலாது.
<*> விதவிதமான சுக துக்கங்களைக் கொடுக்க பாவ புண்ணியத்திற்கு விதவிதமான உடல் தேவைப்படுகிறது. ஆகவே மறுபிறப்பு உண்டாகிறது.
<*> உடல் என்பது சுக போக ஆயதனம் (கருவி). எந்தெந்த பாவ புண்ணியம் தீர்ப்பதற்காக உடல் கிடைத்ததோ அதுவரை அந்த உடல் இருக்கும். பாவ புண்ணியம் தீர்ந்து விட்டால் கர்மம் தீர்ந்துவிடுகிறது. இந்த உடல் அழிந்து விடுகிறது.
கர்மம்
Ø ஒவ்வொரு ஜீவனும் கர்ம மூட்டையோடு இருக்கிறான். ஏற்கனவே சேர்த்து வைத்துள்ள கர்மத்திற்கு சஞ்சித கர்மம் என்று பெயர். சிதம் – தொகுப்பு (collections)
Ø சஞ்சிதத்திலிருந்து வெளிப்படும் ஒரு சிறு பகுதி ப்ராரப்தம். சஞ்சிதத்தில் சேர்ந்த அனைத்து பாவ புண்ணியங்களையும் ஒரே உடலில் தீர்க்க முடியாது. ஆகவே ஒரு குறிப்பிட்ட சுக துக்கத்தை தீர்ப்பதற்காக ஒரு குறிப்பிட்ட உடல் கொடுக்கப்படுகிறது. ஆகவே ப்ராரப்த கர்மத்தை தீர்க்க ஜீவனுக்கு உடல் கொடுக்கப்படுகிறது. நம் முயற்சிக்கு அப்பாற்பட்டதான விஷயங்கள் இதன் மூலமே கிடைக்கின்றன. உதாரணமாக பெற்றோர், உடல், ஆண்-பெண், ஆயுட்காலம் போன்றவைகளைச் சொல்லலாம்.
Ø ப்ராரப்த கர்மத்தை தீர்க்க கொடுக்கப்படும் உடலால் புதிதாக செய்யப்படும் கர்மம் ஆகாமி. கடைசியில் ஆகாமி, சஞ்சித கர்மத்தோடு சேர்ந்து கொள்கிறது. மீண்டும் ப்ராரப்தம் வெளிப்படுகிறது
=> ஞானியின் நிலை
கர்ம பலனை தீர்க்க கொடுக்கப்பட்ட உடல்தான் கர்மத்தை அனுபவிக்கிறது. கர்த்தாவிற்குத் தான் கர்மம். கர்த்தா தான் அல்ல, சரீரம் தான் என்று புரிந்து கொண்ட ஞானிக்கு ஆகாமி கர்மம் கிடையாது.
கர்மம் அகங்காரத்தை சார்ந்தே உள்ளது. ஞானி அறிவினால் அகங்காரத்திலிருந்து தன்னை பிரிப்பதால், அகங்காரம் அழிந்து விடுகிறது. இதனால் அக் கர்மத்திற்கு சார்ந்து இருப்பதற்கு இடமில்லாமல் சஞ்சித கர்மம் நாசமடைகிறது. ஆகாமி வருவதில்லை.
ஆனால் ப்ராரப்தம் ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டுவிட்டதால் அதை ஞானி தடுப்பதில்லை. அனுபவித்து தீர்க்கிறான். அதாவது சரீரம் அனுபவித்து தீர்க்கிறது.
ஞானியானவன் அதனுடைய ஆஷ்ரயம் (ஸ்தானத்தை) நீக்குவதன் மூலமாக சஞ்சித கர்மத்தை நீக்கி விட்டான். ஆகாமி கர்மம் கர்த்ருத்வம் இல்லாததனால் வருவதில்லை. ப்ராரப்தம் அனுபவித்து தீர்க்கப்படுகிறது. தீர்க்கும் போது அதாவது உடலை பிரியும் போது ஞானி விதேக முக்தி அடைகிறான்; மீண்டும் பிறப்பதில்லை.
No comments:
Post a Comment